×

மீன் பிடிக்க சென்றபோது திடீர் பழுது படகு சேதமடைந்ததால் தத்தளித்த மீனவர்கள்: பாதுகாப்பு படையினர் மீட்டனர்

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது விசைப்படகு பழுதாகி, கரை ஒதுங்கியது. அப்போது, தடுப்பில் மோதி படகு சேதமானதால் தத்தளித்த மீனவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். காசிமேட்டில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சிங்காரவேலர் விசைப்படகு சங்கத் தலைவர் அரசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 1,500 லிட்டர் டீசல், 40 பிளாக் ஐஸ் கட்டிகளை ஏற்றிக்கொண்டு விசைப்படகு ஓட்டுனர் கணேஷ் தலைமையில் 6 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போது, நடுக்கடலில் திடீரென இன்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்த மீனவர்கள், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சென்னை துறைமுகம் அருகே கரை ஒதுங்கியபோது தடுப்பு கற்களில் மோதி படகு உடைந்து, முற்றிலும் சேதமானது. விசைப்படகில் இருந்த மீனவர்களை சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் காசிமேடு பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீன் பிடிக்க சென்றபோது திடீர் பழுது படகு சேதமடைந்ததால் தத்தளித்த மீனவர்கள்: பாதுகாப்பு படையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : DHANDAYARPATE ,Chennai harbour ,Dinakaran ,
× RELATED தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய...